Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்ரீரெட்டி போல பிரபல நடிகை பூனம் கவுர் புதிய புகார்

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பல சினிமா நட்சத்திரங்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் காஸ்டிங் கவுச் பற்றி பல்வேறு நடிகைகள் பேசதுவங்கியுள்ளனர். நெஞ்சிருக்கும் வரை படத்தின் மூலம் பிரபலமான நடிகை பூனம் கவுர் தனக்கு நடந்த சம்பவம் பற்றி பேசியுள்ளார்.

“ஒரு பிரபல தயாரிப்பாளர் என்னுடைய வீட்டிற்கு வந்து எனக்கு வாய்ப்பு தருவதாக சொன்னார். அலுலகத்தில் வந்து சந்திக்க அழைத்தார். நான் என்னுடைய அம்மாவுடன் அவரது அலுவலகம் சென்றேன். அவர் அதை எதிர்பார்க்கவில்லை, அதனால் சரியாக கூட பேசவில்லை. இதுவரையில் அவர் எனக்கு ஒரு வாய்ப்பு கூட கொடுக்கவில்லை" என கூறியுள்ளார்.

ஆனால் அந்த தயாரிப்பாளரின் பெயரை பூனம் கவுர் வெளியிடவில்லை.