Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமன்னா எடுத்த முடிவு.. படவாய்ப்பு இல்லாதது காரணமா?

முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை தமன்னா. இப்போதெல்லாம் இவரை முன்னணி ஹீரோக்களின் படங்களில் பார்க்கமுடிவதில்லை.

பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் அவரை தேடி மிக குறைந்த அளவில் தான் வாய்ப்புகள் வருகிறது. தற்போது குயின் தெலுங்க்கு ரீமேக்கில் அவர் நடித்து வருகிறார். அடுத்து பிரபுதேவாவுக்கு ஜோடியாக பார்த்திபன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் தமன்னா.

இந்நிலையில் அவர் அடுத்து ஒரு கன்னட படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொண்டுள்ளார். யாஷ் நடிக்கும் KGF என்ற படத்தில் தான் தமன்னா நடனமாடவுள்ளார்.

தமன்னா பல தெலுங்கு படங்களில் இப்படி ஆகியிருந்தாலும், தற்போது படவாய்ப்புகள் குறைந்துள்ளதால் தான் இப்படி ஒரு பாடலுக்கு ஆட ஒப்புக்கொண்டுள்ளார் என சினிமா வட்டாரத்தில் விமர்சனம் வர ஆரம்பித்துள்ளது.