Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலைஞரின் மறைவால் பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு

சின்ன குஷ்பு என்ற பெயரோடு தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகை ஹன்சிகா. ஆரம்பத்தில் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்துவந்த அவர் இப்போது படங்கள் தேர்வு செய்யும் பிஸியில் இருக்கிறார். சமீபத்தில் அவருடைய நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் அவருடைய 50வது படத்தின் தலைப்பை தனுஷ் இன்று ஹன்சிகா பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிட இருப்பதாக இருந்தது.

ஆனால் மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று ஹன்சிகா பட தகவல் வெளியாகாதாம். இதனை அவரே டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.