Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் நடித்திருந்தால் என் தலையை தான் வெட்டி இருப்பார்கள்! ஐஸ்வர்யாவே சொன்ன விஷயம்

மிஸ் இந்தியா அழகியாக இருந்து பிறகு சினிமா உலகிற்குள் காலடி எடுத்து வைத்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். சினிமா நுழைந்தவுடனே பல முன்னணி நடிகைகளை பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் நடிகையானார்.

பிறகு அபிஷேக்குடன் திருமணம் முடிந்ததும் அந்த பதவியில் இருந்து இறங்கி விட்டார். தற்போது அவரது நடிப்பில் ஃபேனி கான் என்ற படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தீபிகா படுகோனேவும் ரன்வீர் சிங் நடித்து மிகுந்த சர்ச்சைக்குள்ளான பத்மாவத் படத்தில் முதலில் ஐஸ்வர்யாராய் தான் நடிக்க வேண்டியதாம். தீபிகாவின் தலை, மூக்கிற்கெல்லாம் பரிசை அறிவித்தவர்கள், நான் நடித்திருந்தால் என் தலையையே வெட்டியிருப்பார்கள்.

நல்லவேளையாக நான் இப்படத்தில் நடிக்கவில்லை என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக நடிக்க சல்மான்கானை தான் தேர்வு செய்தார்களாம். ஆனால் அப்போது இருந்த இவர்கள் இருவருக்கும் இடையேயான காதல் முறிவால் இந்த ஜோடி சேராமல் போனது.