Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீ வெள்ளத்துக்கு காசு கொடுத்தீயா என கேட்ட ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ள காஜல்

கடும் மழையால் கேரளாவே சின்னபின்னமாகி உள்ளது. ஆங்காங்கே வெள்ள பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டு பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத நிகழ்வாக கருதப்படுகிறது.

இந்த சூழ்நிலையை சமாளிக்க பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் தனது பங்கிற்கு ரூ. 10 லட்சத்தை கொடுத்திருந்தார்.

தற்போது அந்த வெள்ள பெருக்கை சுட்டி காட்டி தனது வருத்தத்தை தெரிவித்திருந்த காஜலை ஒரு ரசிகர், நீ கேரளாவுக்காக காசு கொடுக்கவில்லையா? என கேட்டிருந்தார்.

இதற்கு காஜல், ‘நான் காசுலாம் கொடுத்துடேன், அதை உன்னிடம் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ என தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். இதனால் அந்த ரசிகர் செம ஷாக்கானார்.