Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

4 கோடிக்கு கார் வாங்கிய நடிகர் இவ்வளவு தான் கொடுப்பதா? கோபமாக பேசிய பிரபல நடிகை

பழம்பெரும் நடிகை ஷீலா 1960 மற்றும் 70-களில் முன்னணி நடிகையாக இருந்தவர். இவர் சந்திரமுகி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் கேரள வெள்ள நிவாரண நிதி பற்றி மிக கோபமான கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். தமிழ் தெலுங்கு நடிகர்கள் அதிக அளவில் உதவி செய்துள்ளதை சுட்டிக்காட்டி பலர் மலையாள நடிகர்களையே குறைசொல்லி வரும் நிலையில் நடிகை ஷீலாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

பல கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் 4 கோடிக்கு கார் வாங்கி அதில் செல்கின்றனர். ஆனால் வெள்ள நிவாரணத்திற்கு மட்டும் சில லட்சங்களையே கொடுத்துள்ளனர் என அவர் மலையாள நடிகர்களை குறை கூறியுள்ளார்.