Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விழாவில் பாடலை கேட்டு கண்கலங்கிய ஐஸ்வர்யா ராய்! - ரசிகர்களை அதிர்ச்சியாகிய வீடியோ

சினிமா துறையில் இருந்து ஒதுங்கினாலும் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு எப்போதும் மவுசு குறைந்ததில்லை. அவர் செய்யும் சின்ன விஷயங்கள் கூட தலைப்பு செய்திகளில் வந்துவிடும்.

தற்போது அவர் ஒரு விழாவில் தேசிய கீதம் பாடலை கேட்டு கண்கலங்கியுள்ளார். வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. IMC WE Exhibition 2018 என்ற விழாவில் அவர் கலந்துகொண்ட போது தான் இது நடந்துள்ளது.

அந்த விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது அவர் கண்கலங்கினார். பாடல் முடிந்ததும் அவர் கண்ணீரை துடைத்துள்ளார். இது தெளிவாக வீடியோவில் பதிவாகியுள்ளது. அவர் ஏன் கண்கலங்கினார் என்ற காரணம் தெரியாததால் ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர்.