அவள் நான் பெற்ற மகள் தான்! இத்தனை வயதுக்கு பிறகு குழந்தை பெற்ற பிரபல நடிகை!

நடிகைகள் by Kalam
Topics : #Revathi

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகைகள் பட்டியல் எடுத்தால் கண்டிப்பாக ரேவதி பெயர் இருக்கும் என்றே சொல்லலாம்.

பாரதிராஜாவின் கண்டெடுத்த முத்துக்களில் மண்வாசனை படத்தின் மூலம் அறிமுகமானவர். மகளிர் மட்டும், கன்னி ராசி என இவரது பல படங்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும்.

நடிகையாக 1 முறையும், இயக்குனராக 2 முறையும் தேசிய விருது வாங்கியுள்ளார்.

இவர் புதிய முகம் படத்தில் நடித்தபோது ஹீரோவாக நடித்த ஓளிப்பதிவாளர் சுரேஷ் மேனனை திருமணம் செய்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்து தனிமையில் வசித்து வந்தார்.

இந்நிலையில் 52 வயதான இவர் மஹி என்ற குழந்தையை வளர்த்துவருகிறார். இது தத்தெடுத்த குழந்தை என்ற வதந்திபரவியது.

ஆனால் மஹி நான் டெஸ்ட்டியூப் மூலம் நான் பெற்ற குழந்தை, 5 வயதான அவள் தான் என் உலகம் என்று கூறியுள்ளார்.

இவரது கணவர் சுரேஷ் மேனன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.