சின்ன வயதிலேயே நடிக்க வந்து திரைத் துறையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை கல்யாணி. ஜெயம் படத்தில் இவருக்கு கிடைத்த பாராட்டுக்கள் பல.
பின் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக கலக்கினார்.
திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கம் வராமலேயே இருந்தார். இப்போது இவரது குடும்பத்தில் ஒரு ஸ்பெஷல் வரவு, இவர் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி பெண் குழந்தை பெற்றுள்ளார்.
அந்த குட்டி குழந்தைக்கு நவ்யா கல்யாணி ரோகித் என பெயர் சூட்டியிருக்கிறார்கள்.