Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எம்.எல்.ஏ வை சரமாரியாக வெளுத்து வாங்கிய பிரபல நடிகை! பாலியல் கொடுமை

தமிழ் சினிமாவில் மரியான், பெங்களூரு டேஸ் படங்களில் நடித்தவர் பிரபல நடிகை பார்வதி மேனன். மலையாள சினிமாவின் நடிகையான இவர் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.

அவருக்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது. சமூக நல விசயங்களிலும் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கேரளாவில் கிறிஸ்தவ தேவாலயத்தை சேர்ந்த பாதிரியார் பிராங்கோ கன்னியாஸ்திரிகளை பாலியல் கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இவ்விசயத்தில் எம்.எல்.ஏ ஜார்ஜ் என்பவர் புகார் கொடுத்தவர்களுக்கு எதிராக பேசியிருந்தார். இதனால் பார்வதி ஜார்ஜின் கருத்து வாந்தியை போல வெறுக்கத்தக்கது. கன்னியாஸ்திரிகள் பிரச்சினையில் அவர்களுருக்கு ஆதரவாக எழுந்துள்ள பிரசாரம் பெருமையாக இருக்கிறது. கன்னியாஸ்திரிகள் தைரியத்தை பாராட்டுகிறேன் என கூறியுள்ளார்.