Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளியில் வந்ததும் பிக்பாஸ் ஜனனியின் முதல் படம்! பிரம்மாண்ட இயக்குனர் படத்தில் நடிக்கிறார்

நடிகை ஜனனி ஐயர் இப்போது விஜய் டிவி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ளது அனைவரும் தெரியும்.

தற்போது இறுதிப்போட்டி வரை நுழைந்துள்ள அவர் அடுத்த வாரம் பிக்பாஸ் முடிந்ததும் வெளியில் வந்து ஒரு பிரம்மாண்ட இயக்குனர் படத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

புலி படத்தை இயக்கிய சிம்புதேவன் அடுத்து எடுக்கும் படத்தில் தான் ஜனனி ஐயர் நடிக்கவுள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு இந்த படத்தை தயாரிக்கிறார். வழக்கம் போல வெங்கட் பிரபு படங்களில் இருக்கும் டீம் - பிரேம்ஜி, வைபவ், ஜெய், சிவா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

புலி படம் தோல்வி அடைந்ததை அடுத்து சிம்புதேவன் இடைவெளி விட்டு 24ம் புலிகேசி படத்தை துவங்கினர். அதுவும் பாதியில் நின்றதால் தற்போது புது படத்திற்கு சென்றுள்ளார்.

loading...