Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை கனிகாவின் மகனுக்கு இப்படி ஒரு நோயா?- வருந்தும் பிரபலம்

ஒரு காலத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகள் இப்போது திருமணம் செய்துகொண்டு சினிமா பக்கம் வராமல் இருக்கின்றனர்.

அப்படி மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் நடித்து பிரபலமானவர் கனிகா.

இவருக்கு ஒரு மகன் உள்ளார். அண்மையில் ஒரு பேட்டியில் தன் மகன் குறித்து பேசி மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

வெளிநாட்டில் என்னுடைய மகன் எனக்கு பிறந்தான், ஆனால் குழந்தை பிறக்கும் போது இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றுவது கடினம் என்று கூறியதோடு தனியே ஒரு பெட்டியில் வைத்துவிட்டனர்.

பிறந்த குழந்தையை தூக்கவும் முடியாமல் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் படு சோகத்தில் இருந்தோம். பின் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் அப்படி செய்தால் எது வேண்டுமானாலும் நடக்கும் என்று கூறிவிட்டனர்.

பின் கடவுள் ஆசீர்வாதத்தில் என் குழந்தை 50 நாட்களுக்கு பிறகு என்னிடம் குணமாகி வந்து சேர்ந்தான்.

அந்த அறுவை சிகிச்சை செய்த தழும்புகள் இன்னும் தன்னுடைய மகன் ரிஷி உடம்பில் தெரியும் என்று கூறியுள்ளார்.