நடிகைகளை ஷாப்பிங், டேட்டிங் என பொது இடங்களில் அடிக்கடி காணலாம். அதிலும் பாலிவுட் நடிகைகள் சகஜமாக மற்றவர்களின் கண்ணில் சிக்கிவிடுவார்கள். ஆனால் ஷில்பா ஷெட்டிக்கு விமான நிலையத்தில் சங்கடமான நிகழ்வு நடந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அவர் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிட்னி நகரிலிருந்து மெல்போர்ன் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது பெண் ஊழியர் ஒருவன் Check In நுழைவு வாயிலில் அவரை சோதனை செய்தபோது நிறத்தை காரணம் காட்டி தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். மேலும் ஷில்பா அதிக எடையுள்ள லக்கேஜ் கொண்டுவந்தார் என தகராறு நடந்ததுள்ளது.
இதனால் ஷில்பாவுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் விமானத்தை பிடிக்க முடியாமல் போயிவிட்டது. இதனால் அதிகாரிகளிடம் இச்சம்பவம் குறித்து புகார் அளிக்க பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.