தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, சில மாதங்களாக டிரெண்டிங்கில் இருக்கும் நபர். இந்த டிரெண்டிங்கிற்கெல்லாம் காரணம் பிரபலங்கள் மீது அவர் அடுக்கடுக்காக கூறிய குற்றச்சாட்டுகள் தான்.
தமிழில் இந்த குற்றச்சாட்டுகளில் இயக்குனர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் போன்றோர் சிக்கினர். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஸ்ரீரெட்டி செட்டில் ஆனார்.
இதனால் தெலுங்கு திரையுலகம் கொஞ்சம் நிம்மதியடைந்த நிலையில் தற்போது மறுபடியும் அவர்களது பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளார்.
தெலுங்கில் பிரபல இயக்குனரும் ஸ்ரீரெட்டியை ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வந்துவருமான ராம்கி மீது தான் தனது குற்றச்சாட்டை கூறியுள்ளார். இவரது ஆபாச சாட்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.