சினிமாவில் நடிகைகளுக்கு பிரச்சனை இருக்கும். ஆனால் கவர்ச்சி நடிகைகளுக்கு பின்னால் கண்ணீர் கதை நிச்சயம் இருக்கும். அப்படிதான் சில்க் ஸ்மிதாவுக்கும். ஆனால் அவரின் மரணம் புரியாத புதிர் தான்.
ஹீரோயினாக நடிக்க வந்தவரை கவர்ச்சி நாயகியாக நடிக்க வைக்க அது அவருக்கு பல பட வாய்ப்புகளை கொடுத்தது. ஆனால் வாழ்க்கையில் பல பிரச்சனைகள். மன போராட்டங்கள், அழுத்தங்கள், உளைச்சல்கள் என பெருகி போதைக்கு அடிமையாகி ஒரு கட்டத்தில் அவர் இறந்துவிட்டார். ஆனால் நிஜவாழ்க்கையில் அவர் சிறந்த சமூக நல ஆர்வலர்.
450 படங்களுக்கு மேல் நடித்து அதில் கிடைத்த வருமானத்தில் 70 சதவீத்தை ஆந்திராவில் உள்ள தொண்டு அமைப்பிற்கு தானமாக வழங்கிவிட்டாராம். அவரின் நினைவு தினம் நேற்று.
பலரும் அவரை மறந்த வேளையில் நடிகை கஸ்தூரி அதனை நினைவுபடுத்தியுள்ளார்.
Forever Silk.
— Kasturi Shankar (@KasthuriShankar) September 23, 2018
23 september 1996 #silksmitha #icon #goddess #inMemoriam pic.twitter.com/Tww25ca2yJ