Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனக்கும் நடந்திருக்கு... பாலியல் சர்ச்சை பற்றி பிக்பாஸ் நடிகை விஜயலக்ஷ்மி ஒபன் டாக்

சமீபத்தில் நடந்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் வைல்டுகார்டு எண்ட்ரியாக நுழைந்தவர் நடிகை விஜயலக்ஷ்மி. இவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் தான் சந்தித்த பாலியல் தொல்லை பற்றி கூறியுள்ளார்.

தற்போது #Metoo என்ற பெயரில் பிரபலங்கள் பலரும் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறிவரும் நிலையில் தற்போது விஜயலக்ஷ்மி தான் சிறு வயதில் சந்தித்த சம்பவத்தை கூறியுள்ளார்.

விஜயலக்ஷ்மி பள்ளி பருவத்தில் கராத்தே கிளாஸ் செல்வாராம். அங்கு இருந்த மாஸ்டர் இவரிடம் தவறாக நடக்க ஆரம்பித்தாராம், அதை வீட்டுக்கு வந்து அப்பாவிடம் கூறிவிட்டாராம் விஜயலக்ஷ்மி.