Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இவர் தான் தற்போது தமிழ் சினிமாவின் என்னுடைய க்ரஸ்- நந்தினி புகழ் நித்யா ராம் ஓபன் டாக்

நந்தினி சீரியல் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் நித்யா ராம், இவர் சமீபத்தில் ஒரு வார பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அஜித் பற்றி ஒரே வார்த்தையில் பதில் சொல்லுங்கள் என்று கேட்க ‘கணவர்’ என்று சொல்ல எல்லோருக்குமே அதிர்ச்சி தான்.

உடனே அவர் ‘அட இருங்க, அவர் போல் எனக்கு ஒரு கணவர் வேண்டும், மறுபடியும் சொல்கிறேன், அவரை போல்’ என்று சொல்லி விளக்கம் கொடுத்தார்.

மேலும், தமிழ் சினிமாவில் தற்போது என்னுடைய க்ரஸ் என்றால் விஜய் சேதுபதி தான், அதிலும் கருப்பன், சேதுபதி படத்தை பார்த்து அவர் மேல் மிகவும் க்ரஸ் வந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.