Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சின்மயியின் metooவை தொடர்ந்து பிரபல நடிகர் மீது பாலியல் புகாரை கூறியிருக்கும் அநேகன் பட நடிகை!

தற்சமயம் சமூகவலைத்தளங்களில் டிரெண்டாகி கொண்டிருக்கும் ஹாஸ்டேக் #MeToo தான். இது ஆரம்பத்தில் இருந்தே இருந்தாலும், இதனை நன்கு பிரபலப்படுத்தியது என்றால் அது பாடகி சின்மயி தான்.

இவரை தொடர்ந்து எழுத்தாளர் சந்தியா மேனன் பிரபல பாடலாசிரியர் வைரமுத்தின் மீது பகிரங்க பாலியல் குற்றச்சாட்டை கூறினார். கூறியது அவர் என்றாலும் அதன்பின் வைரமுத்து மீதான குற்றச்சாட்டு எல்லாம் வந்தது சின்மயியிடம் இருந்து தான்.

இந்நிலையில் இவர்களை போல பல நடிகைகளும் தங்களது குற்றச்சாட்டுகளை இந்த #MeTooவில் கூறி கொண்டுவரும் நிலையில் தனுஷின் அநேகன் படத்தில் நடித்த நாயகி அமைரா தஸ்தூர் ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பிரபல நடிகர் மீது பாலியல் குற்றசாட்டை கூறியுள்ளார்.

அதில், திரையுலகில் மிக பெரிய அந்தஸ்தில் உள்ள நடிகர் அவர், இப்போது அவர் பெயரை சொல்ல விரும்பவில்லைஎன்னுடன் நடித்த நடிகர் ஒருவர் என்னை அத்துமீறி இறுக்கி அணைத்தார். இதனால் நான் அவரை பற்றி இயக்குனரிடம் புகார் அளித்தேன்.

ஆனால் அவர் இதையெல்லாம் கண்டு கொள்ளாதே என கூறி விட்டார். என்னை பல இடங்களில் உதாசீனப்படுத்தியது மட்டுமில்லாமல் அவரிடம் மன்னிப்பும் கேட்க கூறியிருந்தார்.

விரைவில் அந்த நடிகரின் பெயரின் அறிவிப்பேன். நான் யாரை சொல்கிறேன் என்பது சம்மந்தப்பட்ட நடிகருக்கு தெரியும் என்றார். இதனால் கோலிவுட் மேலும் ஆட்டம் கண்டுள்ளது. மேலும், கண்டிப்பாக அது தனுஷ் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.