Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை கிண்டல் செய்வீர்களா, கீர்த்தி சுரேஷ் கூறிய கலக்கல் பதில்

தளபதி விஜய்யுடன் இரண்டு படங்களில் நடித்து விட்டார் கீர்த்தி சுரேஷ். பைரவாவை தொடர்ந்து தற்போது சர்காரில் இந்த ஜோடி இணைந்துள்ளது.

இவர் நடிப்பில் இந்த வாரம் சண்டக்கோழி-2 திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் கீர்த்தி பிஸியாகவுள்ளார்.

அதில் ஒரு நிகழ்வில் அவரிடம் நீங்கள் செம்மையாக கலாய்ப்பீர்கள் என்று கேள்வி பட்டுள்ளோம், விஜய்யை கலாயத்தீர்களா? என்று கேட்டனர்.

அதற்கு அவர் ‘ஏங்க நீங்க வேற, அவரை நான் திரையில் பார்த்து கொண்டாடியுள்ளேன், நான் எப்படி கலாய்ப்பேன்.

அவர் தான் என்னை கலாய்ப்பார்’ என்று கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.