Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் படங்களில் எனக்கு இந்த இரண்டு தான் பிடிக்கும்! சர்கார் பட நாயகியே கூறிய விஷயம்

விஜய் நடித்து முடித்துள்ள சர்கார் படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவுள்ளது படத்தை தயாரிக்கும் சன்பிக்சர்ஸ் நிறுவனம். இன்னும் ஒரு மாதம் தான் உள்ளதால் இந்த படத்திற்கு இப்போது இருந்தே எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் நாயகிகளாக கீர்த்தி சுரேஷும் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். இந்நிலையில் வரலட்சுமி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்து இருந்தார்.

அதில் தளபதி படங்களில் உங்களுக்கு பிடித்த படங்கள் என்ன என்ற கேள்விக்கு சற்றும் யோசிக்காமல், தலைவா, கத்தி தான் என கூறியுள்ளார்.

படத்தை பற்றி யாரும் எந்த கருத்தும் கூற கூடாது என இயக்குனர் கூறியுள்ளதால் படத்தை பற்றி இவர் எதுவும் சொல்லவில்லை.