Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தன்னிடம் தவறாக நடந்துகொண்ட பிரபலத்தை செருப்பால் அடித்து வெளுத்து வாங்கிய மும்தாஜ்- யார் அது?

பாலியல் தொல்லை கொடுத்த பிரபலங்கள் பற்றி இப்போது நிறைய விஷயங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் வருவது தான் மக்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

இந்த பாலியல் தொல்லைகள் குறித்து மும்தாஜ் ஒரு பேட்டியில், என்னிடம் சிலர் இப்படி அணுகியிருக்கிறார்கள். ஒரு இயக்குனரை நான் செருப்பால் அடித்து வெளுத்திருக்கிறேன்.

மற்றொருவர் வெளியே சூட்டிங் சென்றால் போர் அடிக்கும் என சூசகமாக கூறினார், நான் உடனே சிரித்து உங்களுக்கு பிடித்தது போல் யாராவது வருகிறார்கள் என்றால் அவர்களை இதில் கமிட் செய்யுங்கள் என்றேன். இன்னொரு சம்பவத்தில் ஒருவரை கண்டபடி நான் திட்டியிருக்கிறேன் என அவர் பேசியுள்ளார்.

ஆனால் அவர்கள் யார் யார் என்ற விவரத்தை மும்தாஜ் பதிவு செய்யவில்லை.