Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக்க போகும் இயக்குனர் இவர்தானாம்! ஜெயலலிதாவாக நடிப்பது யார் தெரியுமா?

மறைந்த செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக்க பல இயக்குனர்கள் முயற்சித்து வருகின்றனர். ஏ.எல்.விஜய், பிரியதர்ஷினி என இந்த பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பவர் இயக்குனர் லிங்குசாமி தான்.

இவரது இயக்கத்தில் சமீபத்தில் கூட சண்டைக்கோழி-2 படம் வெளிவந்திருந்தது. இந்நிலையில் தான் நானும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக்க உள்ளேன் என கூறியுள்ளார்.

ஏற்கனவே இத்தகைய படமெடுக்க முயற்சித்தவரும் இயக்குனர்களிடம் ஆளும் கட்சியினர் பணம் கேட்பதாக செய்திகள் கூறப்படும் நிலையில் லிங்குசாமியின் இந்த முடிவு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் ஜெயலலிதாவாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.