Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

42 வயதில் திருமணமா? நடிகை சுஷ்மிதா சென் வீடியோ பதிவிட்டு விளக்கம்

பிரபல நடிகை சுஷ்மிதா சென்னுக்கு தற்போது 42 வயது ஆகிறது. அவர் தற்போது Rohman Shawl என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

இருவரும் இருக்கும் புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகின்றன. சுஷ்மிதா சென்னை விட Rohman Shawlக்கு 16 வயது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர்கள் இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது.

தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ள சுஷ்மிதா வதந்தி என குறிப்பிட்டுள்ளார். தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டு அவர் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.