Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் விஜய்63 ஹீரோயினா? சென்சேஷனான இளம் நடிகையின் அதிருப்தி பதில்

தளபதி விஜய் தற்போது தொடர்ந்து ரசிகர்களுக்கு ஆச்சர்யம் மேல் ஆச்சர்யம் கொடுத்து வருகிறார். சர்கார் பார்த்து கொண்டாடி கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு தற்போது விஜய்யின் அடுத்த பட அறிவிப்பு ஆச்சர்யம் கொடுத்துள்ளது.

அட்லீ இயக்கும் இந்த படத்தின் ஹீரோயின் யார் என்பது தான் தற்போது ரசிகர்கள் மனதில் உள்ள கேள்வி. சமந்தா தான் ஹீரோயின் என ஒரு தகவல் உலா வருகிறது. ஆனால் படக்குழு இதுவரை எந்த அறிவிப்பும் இதுபற்றி வெளியிடவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் சென்சேஷன் ஆன பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா தான் விஜய் 63 ஹீரோயின் என தகவல் பரவியது.

அதற்கு பதில் அளித்துள்ள நடிகை, "Dai..don’t give me expectations da." என கூறியுள்ளார். இதனால் அவர் படத்தில் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. எனக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தாதீர்கள் என்பதை தான் அவர் இப்படி கூறியுள்ளார்.