Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் இந்த படத்தை பார்த்து தான் நான் அவரது தீவிர ரசிகையானேன்! பில்லா பாண்டி நடிகையின் பேட்டி

தனது ஸ்டைலின் மூலம் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த அஜித்திற்கு பில்லா படம் மற்றொரு வெற்றியை தேடி தந்தது. மேலும் இந்த படத்தில் எல்லா சிறப்பம்சம் ஒன்றாக அமைந்திருந்ததால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தை பார்த்து தான் நான் அஜித்தின் தீவிர ரசிகையானேன் என கூறியுள்ளார் நடிகை சாந்தினி. இவரது நடிப்பில் இன்று வண்டி படம் வெளியாகி இருக்கும் நிலையில் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில், 2007, நான் ஸ்கூல் படித்து கரெக்ட்டாக முடித்திருந்த நேரம், தலயின் பில்லா படம் வெளியாகி இருந்தது. இப்படத்தில் தல, யுவனின் அந்த தீம் மியுசிக்கில் அசத்தலாக நடந்துவரும் சீனை பார்த்து தான் அவரது தீவிர ரசிகையானேன்.

ஆனால் வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல் அதே யுவனின் இசையில் எனது ராஜா ரங்கூஸ்கி படம் வெளியானது என்றார். மேலும் இவர் அஜித்தின் தீவிர ரசிகை என்பதால் தான் அஜித் ரசிகராக ஆர்.கே.சுரேஷ் நடித்திருந்த பில்லா பாண்டி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.