நடிகை நமீதாவுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இங்கே இருக்கிறது. மச்சான்ஸ் என் அவர் சொன்னால் அதை ரசிக்கும் பலர் இங்கு மட்டுமல்ல மலையாளத்திலும் இருக்கிறார்கள்.
ஹீரோயினாக இருந்தவர் படங்களில் கவர்ச்சி தோற்றங்களில் நடித்து வந்தார். பின் வாய்ப்புகள் இல்லாததால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் கலந்துகொண்டார்.
அதன் பின் அவர் தன் காதலரான தயாரிப்பாளர் வீர் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். தற்போது மீண்டும் சினிமா பக்கம் வந்துள்ளார் நமீதா.
இந்நிலையில் அவர் இனி கவர்ச்சியான வேடங்களில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துவிட்டாராம். மேலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடிக்க போவதாகவும் கூறியுள்ளார்.