Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தவறாக நடந்த மேனேஜர் - போலீசில் புகார் அளித்துள்ள முன்னணி நடிகை

நடிகைகள் பலரும் மேனேஜர் வைத்துகொள்வது சாதாரண விஷயம் தான். அப்படி முழுமையாக நம்பி அப்படி தன் மேனேஜரிடம் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்து வைத்திருந்த நடிகை தற்போது போலீஸ் புகார் அளிக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்.

பாலிவுட் நடிகை ஜரீன் கான் தான் இப்படி செய்துள்ளார். அவரின் மேனேஜராக இருந்த அஞ்சலி என்பவர் பண விஷயங்களில் மோசடி செய்து, அது பற்றி கேட்டபோது இவரை மோசமான வார்த்தைகளில் திட்டியதாக புகாரில் கூறியுள்ளார்.

மேலும் அவர் போனில் இருந்து சில தகாத மெசேஜ்களையும் அவர் மற்றவர்களுக்கு அனுப்பியுள்ளார் என புகார் தெரிவித்துள்ளார்.