Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிக்கு இப்படி ஒரு கிப்ட் கொடுப்பது எனக்கு பெருமை.. அதிரடியாக பேசியுள்ள பிரபல நடிகை

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாள் என்பதால் நடிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை கஸ்தூரி சற்று வித்யாசமாக தான் ரஜினிக்கு நாளை தரவுள்ள கிப்ட் பற்றி பேசியுள்ளார். "ரஜினிக்கு பலரும் பல விதத்தில் வாழ்த்து சொல்லலாம்.. நாளை காலை சரியாக 9 மணிக்கு நான் தருகிறேன் பார் ஒரு அற்புதமான கிப்ட்.. அதை அவரிடம் எடுத்து செல்வதில் பெருமையாக கருதுகிறேன்" என அவர் கூறியுள்ளார்.

அவர் அப்படி என்ன தரப்போகிறார் என யோசிக்க வைத்தாலும், 'பாரதியார் பிறந்தநாளுக்கு போஸ்ட் போடாமல், ரஜினிக்கு மட்டும் ஏன் போடுகிறாய்" என கூறி பலரும் விமர்சித்துள்ள நிலையில், அவர்களுக்கும் கஸ்தூரி பதிலடி கொடுக்கும் விதத்தில் பேசியுள்ளார்.