Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சாரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும், காரணம்...! மனம் திறக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் உருவாகி இருக்கும் கனா படம் வருகிற 21ஆம் தேதி வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக இப்படக்குழு பேட்டிகளை அளித்து வருகின்றனர்.

அதில் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயனின் தனித்தன்மையென எதை நீங்கள் பார்க்கிறீர்கள் என ஐஸ்வர்யா ராஜேஷிடம் கேட்டத்தற்கு, எனக்கு விஜய் சாரை ரொம்ப பிடிக்கும்.

அவரது நடிப்பில் ஹூயுமரை கலந்து நல்ல எண்டர்டெய்னிங்கா பண்ணுவார். அதே நேரத்தில் மக்களையும் கவர வேண்டும். அது எல்லாமே விஜய் சாரோட எல்லா படங்களிலும் இருக்கும். அதே தரம் தான் சிவகார்த்திகேயனின் படங்களிலும் உள்ளது என்றார்.