Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலியல் உறவு, கன்னித்தன்மை பற்றி பகிரங்கமாக பேசி சரியான அதிரடி கொடுத்த இளம் நடிகை!

பாலிவுட் சினிமாவை சேர்ந்தவர் இளம் நடிகை கல்கி கொச்லின். Dev D படத்தில் நடித்துள்ளார். அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில் பாலியல் கல்வி பற்றி பேசியுள்ளார்.

மக்கள் பாலியல் உறவை புனிதமாகவும், கெட்டதாகவும் கருதுவதை நிறுத்த வேண்டும் என்னை பொறுத்தவரை கன்னித்தன்மை என்பது புதையல் அல்ல. பெண்கள் அதனை பாதுகாத்து கணவருக்கு பரிசாக கொடுக்க.

இந்திய பெற்றோர்கள் பாலியல் பற்றியும், பாலியல் கொடுமைகள் பற்றியும் பிள்ளைகளிடம் பேச வேண்டும். குழந்தைகள் முறையான உறவு, முறையற்ற உறவு என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.

இப்போதைய காலத்தில் அதிகமான பெண்கள் படித்தும் சுயமாகவும் இருக்கின்றார்கள். ஆண்கள் தான் நாகரிகமான, முற்போக்கு சிந்தனையுள்ள பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொள்வதில்லை.

பெண்களுக்கு இந்த பாலியல் விழிப்புணர்வை கற்றுக்கொடுக்கும் பெற்றோர்கள் கொஞ்சம் தங்கள் மகன்கள் மீதும் கவனம் செலுத்தி எப்படி பெண்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என பாடம் நடத்துங்கள் என கூறியுள்ளார்.