Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மணிரத்னம் இயக்கும் படத்தில் விஜய்க்கு ஜோடி இந்த முன்னணி நடிகையா? வெளியான சூப்பர் தகவல்

சர்கார் படத்திற்கு பிறகு அட்லீ இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இம்மாதம் 21 அல்லது 22ஆம் தேதியில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு அடுத்ததாக விஜய் இந்த இயக்குனரின் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார் என்று பல பெயர்கள் கூறப்படுகின்றன. அதில் முதன்மையாக இருப்பவர் மணிரத்னம்.

பிரபல எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் படமாக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்யை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் விஜய்யின் ஜோடியாக தான் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய்யுடன் விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி போன்றோரும் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.