Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓடாத படத்துக்கு சக்‌ஷஸ் மீட்டா? கனா வெற்றி விழா மேடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி பேச்சு

சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான படம் கனா. அருண் காமராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீரங்கனையாக நடித்திருந்தார்.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் உள்பட அனைவரும் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த படத்தின் வெற்றி தான் உண்மையான வெற்றி என்று நினைக்கிறேன். ஏனென்றால் நிறைய படங்கள் ஓடுதோ இல்லையோ வெற்றி விழா கொண்டாடுகிறார்கள் என கூறினார்.