Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் படத்தில் நடித்தவருக்கே டிக்கெட் கிடைக்காத கொடுமை! பிறகு என்ன செய்துள்ளார் பாருங்க

அஜித்தை வைத்து நாலாவது முறையாக விஸ்வாசம் படத்தை இயக்கியிருக்கிறார் சிறுத்தை சிவா. இவர்களது கூட்டணியில் முதல் படமாக வெளிவந்த வீரம் படத்தில் அஜித்துடன் பழம்பெரும் நடிகை கலைராணியும் நடித்திருந்தார்.

இவர் இந்த படத்தை எப்படி முதல் ஷோ பார்த்தார் என்பதை தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அதில், நான் காரில் சென்று கொண்டிருந்த போது, காரை நிறுத்தி சாலையில் வைக்கப்பட்டிருந்த வீரம் பட கட் அவுட்டை வெறித்து பார்த்தேன். அப்பவே இந்த படத்தின் முதல் ஷோவை பார்த்தே தீர வேண்டும் என முடிவு செய்தேன்.

ஆனால் எந்த தியேட்டரிலும் டிக்கெட் கிடைக்கவில்லை. பிறகு வேறு வழியில்லாமல் சத்யம் தியேட்டரில் 10 ரூபாய் டிக்கெட்டில் கட் அவுட்டை வெறித்து பார்த்ததுபோல் பார்த்தேன். என்னை தாண்டி தான் மற்றவர்கள் அனைவரும் பார்க்கிறார்கள் என்ற கர்வம் இருந்தது என்றார்.