Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் விஜய்க்கு பயம் இல்லை, விட்டுக்கொடுத்தார் அவ்ளோதான்..: பிரபல நடிகை அதிரடி பேச்சு

யாராவது கருத்து கூறிவிட்டால் அதை கருத்தால் எதிர்க்காமல் சிலர் அவர்கள் மொத்த குடும்பத்தையே இழுத்து தவறாக பேசி, ஆபாசமாக திட்டுவது, மிரட்டல் விடுப்பது என்று மிக மோசமான நிலைமை தான் உள்ளது. அப்படி பலமுறை சர்ச்சைகளில் சிக்குபவர் நடிகை கஸ்தூரி தான்.

சமீப காலமாக அவர் அஜித் ரசிகர்களிடம் சண்டை போட்டு வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் விஜய்யின் குணம் பற்றி பேசியுள்ளார்.

"விஜய் ரசிகர்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். அதற்கான வரலாறும் இருக்கிறது. சர்கார் சர்ச்சையின் போது விஜய் அமைதியாக இருக்க இது தான் காரணமாக இருக்கும். விஜய் பயப்படவில்லை. பயத்திற்கும், விட்டு கொடுக்கவேண்டும் என்பதற்கு வித்யாசம் உள்ளது. விட்டுக்கொடுப்பது பெரிய மனுஷத்தனம்" என கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார்.