Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணியில் இருக்கும்போதே நித்யா மேனன் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு

மெர்சல் படத்தில் விஜய்யின் மனைவியாக நடித்திருந்த நித்யா மேனன் அடுத்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. அது மட்டுமின்றி அவர் இரண்டு மலையாள படங்களிலும் நடித்துவருகிறார்.

இந்நிலையில் அவர் தற்போது சீரியலில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். மாதவன் நடித்து அமேசான் இணையத்தளத்தில் வெளிவந்திருந்த ப்ரீத் சீரியலின் இரண்டாவது சீசனில் தான் நித்யா மேனன் நடிக்கவுள்ளார்.

சினிமா வாய்ப்புகள் அதிகம் வரும்போதே ஏன் சீரியலில் நடிக்க முடிவெடுத்தீர்கள் என கேட்டதற்கு “இந்த கதையை கேட்டதும் நடிக்கவேண்டும் என ஆழ்மனதில் தோன்றியது. சினிமா போல இல்லாமல் இதில் அதிக நேரம் நம் நடிப்பை , திறமையை காட்ட வாய்ப்பு கிடைக்கும்” என தெரிவித்துள்ளார் நித்யா மேனன்.

இதே சீரியலில் ஹிந்தி நடிகர் அபிஷேக் பச்சனும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.