Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓவியாவின் சர்ச்சை படத்தின் ரிலீஸில் படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு!

பிக்பாஸ் மூலம் மிகப்பிரபலமான ஓவியாவின் நடிப்பில் 90ML படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்து 2 வருடங்களாகவுள்ள நிலையில் ஓவியாவின் நடிப்பில் வெளியாக இருக்கும் முதல் படம் இதுதான்.

இந்த படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார். அனிதா உதிப் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன் வெளியாகி ஓவர் கவர்ச்சி மற்றும் டபுள் மீனிங் வசனங்களால் பயங்கர ட்ரெண்டானது.

இந்நிலையில் இந்த படத்திற்கு முன்னணி நடிகர்களின் படங்களை போல அதிகாலை 5 மணி காட்சியை ஏற்பாடு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரசிகர்கள் அனைவரிடத்திலும் கருத்தும் கேட்டு வருகிறது.