அண்மைகாலமாக நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்து Me Too ல் புகார் அளித்து வந்தனர். நாடு முழுக்க பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. தற்போது பெங்காலி சினிமாவை சேர்ந்த இளம் நடிகை அனுரூபா இயக்குனர் பாவல் என்பவர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.
பேஸ்புக் பக்கத்தில் அவர் பாவல் இயக்கிய ரொசொகொல்லா படத்தின் ஹீரோயின் ஆடிசனுக்காக நான் சென்றிருந்தேன். ஒரு நாள் எனக்கு போனில் நான் ராதிகா ஆப்தே போல இருப்பதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தருகிறேன் என் கூறி நேரில் வர சொன்னார்.
நான் மேக்கப் இல்லாமல் சாதாரணமாக சென்றேன். என்னை பார்த்ததும் உடனே அவர் கட்டிப்பிடித்து முத்தமிட்டார். நான் அதிர்ச்சியாகி ஓடிவிட்டேன். பின் எனக்கு அடிக்கடி அவர் போன் செய்து கல்யாணம் செய்துகொள்ள வற்புறுத்தினார் என கூறியுள்ளார்
இந்நிலையில் இயக்குனர் பாவல், அனுரூபா என் மீது பொய் புகார் அளித்துள்ளார். நான் எடுத்த 4 படங்களில் 100 பெண்களுடன் பணியாற்றியுள்ளேன். என் மீது யாரும் குறை சொன்னதில்லை. பெண்களிடம் நேர்மையாக நடப்பவன் நான் என கூறியுள்ளார்.