Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேகமான வளர்ச்சியில் ப்ரியா பவானி ஷங்கர்! மலையாள பிரபல நடிகருக்கு ஜோடியாகிறார்

சீரியலில் இருந்து சினிமாவில் நடிகை ஆனவர்கள் மிக குறைவு தான். அந்த குறைவில் ப்ரியா பவானி ஷங்கரும் ஒருவர். கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் ஆரம்பமான இவரது சினிமா பயணம் கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடிக்கும் வரை தற்போதைக்கு வந்துள்ளது.

இவரது நடிப்பில் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர், அதர்வாவிற்கு ஜோடியாக குருதி ஆட்டம் போன்ற படங்கள் வெளிவர உள்ளன.

தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் இவரது சினிமா பயணத்தில் அடுத்ததாக மலையாளத்தின் பிரபல நடிகர் துல்கர் சல்மானின் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். ரா.கார்த்திக் என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு வான் என்று பெயர் வைத்துள்ளனர்.