Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நடிகருடன் த்ரிஷா காதலா? ஒரே ஒரு ட்விட்டால் மீண்டும் தொடரும் கிசுகிசு

நடிகைகள் எந்த அளவு பிரபலமாகுகிறார்களோ அந்த அளவுக்கு அவர்களை சுற்றி கிசுகிசுக்களும் பின்னப்படுகின்றன. இந்த கிசுகிசுக்களில் இருந்து இதுவரை எந்த நடிகையும் தப்பித்தது இல்லை.

அப்படி இருக்க த்ரிஷா மட்டும் என்ன விதிவிலக்கா? அவரையும் பல நடிகர்களுடன் இணைத்து பேசப்பட்டன. அதில் மிகவும் வலுத்தது என்று பார்த்தால் அது தெலுங்கு நடிகர் ராணாவுடனான கிசுகிசு தான். இவருடன் கல்யாணம் வரை எல்லாம் சென்றார் த்ரிஷா.

ஆனால் அந்த கல்யாணம் நின்றுவிட, அந்த கிசுகிசுவும் நின்று போனது. ஆனால் தற்போது மீண்டும் இந்த பேச்சு வலுத்துள்ளது. அதற்கு காரணம், டுவிட்டரில் ஆர்யாவை வாழ்த்திய ராணாவிடம் தானாக சென்று த்ரிஷா பேசியது தான். இந்த பேச்சு வேகமாக பரவியதை அடுத்து அந்த பதிவை நீக்கிவிட்டார் த்ரிஷா.