Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளம் நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வயதான பிரபல நடிகருக்கு நேர்ந்த கதி! பகிரங்கங்கமான மன்னிப்பு

சினிமாவில் அண்மைகாலமாக Me Too இயக்கத்தின் கீழ் பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் கொடுமைகள் பற்றி பேசிவந்தனர். இதில் சில பிரபலங்கள் சிக்கினர். மலையாள சினிமாவிலும் இது தொடர்ந்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன் இளம் நடிகை திவ்யா 60 வயதுள்ள நடிகர் அலான்சியர் லே தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்தார். மேலும் தன்னிடம் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதனை அந்த நடிகர் மறுத்ததோடு, மழுப்பலாக பேசிவந்தார். இதனால் சம்மந்தப்பட்ட நடிகருக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. இந்நிலையில் அலான்சியர் லே அண்மையில் ஒரு நாளிதழ் மூலம் நடிகை திவ்யாவிடமும், மேலும் சிலரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.