Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அப்படினா என் படத்தை பாக்காதீங்க.. ட்ரோல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்த ஓவியா

நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பெற்ற நல்ல பெயர் அனைத்தையும் குழி தோண்டி புதைக்கும் விதத்தில் இருந்தது 90ml படத்தின் ட்ரைலர்.

ஆபாச வசனம், முத்தக்காட்சி என ட்ரைலர் மொத்தமும் அடல்ட் கன்டன்ட் என்பதால் சமூக வலைத்தளங்களில் அதிகம் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் இது பற்றி பேட்டி அளித்துள்ள பேட்டியில் ட்ரோல் செய்பவர்களுக்கு பதிலடி அளிக்கும் விதத்தில் பேசியுள்ளார்.

"கலாச்சாரம் என்பது சின்ன வயது முதல் நம் மனதில் இருப்பது. ஒரு படம் பார்ப்பதால் அது மாறிவிடும் என கூறுவதை ஏற்க முடியாது. அப்படி நினைப்பவர்கள் என் படத்தை பார்காதீங்க" என கூறியுள்ளார் ஓவியா.