Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் இறப்புக்கு பிறகு.. மகனுக்காக நடிகை பரவை முனியம்மா உருக்கமான வேண்டுகோள்

நடிகை பரவை முனியம்மாவிற்கு சமீபத்தில் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. இது பற்றி மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், தமிழக அரசுக்கு மற்றொரு கோரிக்கையும் வைத்துள்ளார்.

அவர் வறுமையில் வாடிய போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 6 லட்சம் ருபாய் வைப்புநிதி அளித்து உதவினார். அதன்மூலம் மாதம் 6 ஆயிரம் ருபாய் வட்டி கிடைக்கிறது.

மொத்தம் 6 குழந்தைகள் பெற்ற பரவை முனியம்மாவிற்கு, கடைசி பையன் மூளை வளர்ச்சி இல்லாதவர். அவருடன் தான் முனியம்மா தற்போது வசித்து வருகிறார். தன் கணவர் இறந்து 3 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தனக்கு பிறகு அந்த உதவி தொகையை தன் மகனுக்கு வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார் முனியம்மா.