Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹன்சிகாவிற்கு மீண்டும் மிகப்பெரிய சிக்கல்

நடிகை ஹன்சிகா நடித்துவரும் மஹா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகை காவி உடை அணிந்து புகைப்பிடிப்பது போல காட்சி இருந்தது. மேலும் பின்னணியில் காசி கோவில் இருந்தது.

இது மிகப்பெரிய சர்ச்சை ஆன நிலையில் அதில் நடித்த ஹன்சிகா மற்றும் இயக்குனர் மத நம்பிக்கையை புண்படுத்தும் விதமாக செயல்பட்டதாக கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் ஹன்சிகா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என போலீஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். நடவடிக்கை பற்றி இன்னும் இரண்டு வாரத்தில் அறிக்கை அளிக்குமபடி போலீசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.