Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அபிநந்தனை பார்த்து ஷாக்கான அமெரிக்கா! சொல்கிறார் பிரபல நடிகை ப்ரீத்தி ஜிந்தா

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் வர்த்தமான் சென்ற மிக்- 21 பைஸன் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்துவதற்கு முன்பு அவர்களின் எஃப் 16 விமானத்தை அவர் சுட்டு வீழ்த்தினார்.

அவரின் இத்திறமையை பார்த்து அமெரிக்கா வியப்பதாக பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா ட்வீட் செய்துள்ளார். அதில், 65 ஆண்டுகள் பழமையான ரஷ்ய விமானமான மிக்-21, அமெரிக்காவில் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட எஃப்16ஐ வீழ்த்திவிட்டதா என்று அமெரிக்க மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதன் மூலம் விமானியின் பயிற்சி பற்றி தெரிகிறது. சிறந்த விமானி இருக்கும் விமானமே சிறந்த விமானம் என்று ட்வீட் செய்துள்ளார்.