Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் நடிகர்களில் எனக்கு இவர்களுடன் தான் நடிக்க ஆசை! நடிகை ஷ்ருஷ்டி டாங்கே

நடிகர் கதிருடன் சத்ரு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகை ஷ்ருஷ்டி டாங்கே. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது பாண்டிசேரியில் உள்ள கடற்கரை பொது கழிப்பிடத்தில் காஸ்டியூம் மாற்றி அனைத்து படக்குழுவையும் அதிர்ச்சியாக்கினார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றை தற்போது அளித்துள்ள ஷ்ருஷ்டி டாங்கே, மஹாராஷ்டிரா பெண்ணாக இருந்தாலும் தமிழ் கற்று கொண்டேன். தமிழ் நடிகர்களில் எனக்கு அஜித், விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசை.

அரசியல் ஆசை உண்டா என கேட்கிறார்கள். எதுவாக இருந்தாலும் நேரடியாக பேசுபவள். எனக்கு அதெல்லாம் ஒத்து வராது. நூறு படங்கள் வேண்டாம், பத்து நல்ல படங்களில் நடித்தாலே போதும். தமிழ் மக்களின் ஆதரவு என்றும் தேவை என கூறினார்.