Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனக்கு இதுமாதிரியான மாப்பிள்ளை தான் வேண்டும்! எங்க வீட்டு மாப்பிள்ளை பிரபலம் சீதாலட்சுமி

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பப்பட்ட பிரபல நிகழ்ச்சி தான் எங்க வீட்டு மாப்பிள்ளை. இந்நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா தான் ஹீரோ.

அவரை 16 பெண்கள் இம்ப்ரஸ் செய்ய வேண்டும். அதில் யாரை ஆர்யாவிற்கு பிடிக்கிறதோ அந்த பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்வார். இப்படி கூறி தான் அந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பப்பட்டது.

ஆனால் கடைசியில் ஆர்யா யாரையும் தேர்வு செய்யவில்லை. இந்நிகழ்ச்சியில் இறுதி சுற்றுக்கு வந்த சீதாலட்சுமி ஆர்யா- சாயிஷா திருமணத்தை பற்றி கூறுகையில், அவர்களது காதலை வெளிப்படையாக கடந்த காதலர் தினத்தன்று கேட்டப்போது சிறிது ஷாக்கானேன்.

எனக்கு மாப்பிள்ளை கண்டிப்பாக பிளேபாயாக இருக்க கூடாது. லாயலா இருக்கணும். நம்பகமானவராக இருக்கணும். சின்சியராக இருக்கணும். அவருடன் இருக்கும்போது நிம்மதி இருக்கணும். அப்பா அம்மாவுடன் இருக்கும் ஃபீல் சிறிதாவது இருக்கணும். கொஞ்ச கெட்ட பழக்கமெல்லாம் இருக்கலாம் தப்பில்ல என்றார்.