Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ் ஆர்த்தி! கேலி கிண்டல் செய்த ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஆர்த்தி. பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து கலக்கியவர். பிக்பாஸ்க்கு பின்னர் அவருக்கு வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் அமையவில்லை.

திரையில் சில நிமிடம் வந்தாலும் சிரிக்கவைத்து விடும் அவர் தற்போது படங்களில் வராமல் இருப்பதை கண்டு ரசிகர்களுக்கு வருத்தம் தான். அதே வேளையில் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கிறார்.

அவர் தற்போது ஆன்மீகவாதி போன்ற உடையணிந்து ஒரு போட்டோவை வெளியிட்டிருக்கிறார். இந்த கெட்டப்பை கண்டு ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். என்ன கமெண்ட் அடித்திருக்கிறார்கள் என நீங்களே பாருங்கள்...