Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மகாநடியை தொடர்ந்து மீண்டும் ஒரு பயோகிராபியில் கீர்த்தி சுரேஷ், இந்த முறை யாருடையது தெரியுமா? இதோ

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகிவிட்டார். இவர் நடிப்பில் தெலுங்கில் வந்த மகாநடி பிரமாண்ட வெற்றியை பெற்றது.

தெலுங்கு சினிமா இவரை தலையில் தூக்கி தான் கொண்டாடி வருகின்றது, இந்நிலையில் இவர் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.

இதில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக இவர் நடிக்கின்றார், இதுக்குறித்து நம் தளத்தில் ஏற்கனவே தெரிவித்து இருந்தோம்.

இப்படம் பிரபல கால்பந்து வீரர் சையது அப்துல் ரஹீம் அவர்களின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு எடுக்கப்படவுள்ளதாம்.

சையதாக அஜய் தேவ்கன் நடிக்க, அவருக்கு ஜோடியாக கீர்த்தி நடிக்கின்றார்.