Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆர்யாவுக்கு திருமணம் முடிந்தபிறகும் அபர்ணதி செய்த வேலை- மோசமாக விமர்சிக்கும் ரசிகர்கள்

எங்க வீட்டு மாப்பிள்ளை இந்த நிகழ்ச்சியை யாரும் மறந்திருக்க மாட்டோம். 16 பெண்கள் பல போட்டிகளுக்கு பிறகு தேர்வாகி ஆர்யாவை கவர பல விஷயங்கள் செய்தனர்.

ஆர்யா அவர்களுக்கு கடுமையான போட்டிகள் வைத்து இறுதியில் 3 பேரை தேர்வு செய்தார். அதில் இருந்து ஒருவரை அவர் திருமணம் செய்வார் என்று பார்த்தால் கடைசியில் சயீஷாவை திருமணம் செய்து கொண்டார்.

நிகழ்ச்சியில் ஆர்யா மீது பயங்கர காதலோடு இருந்தவர் அபர்ணதி. அவருக்கு திருமணம் முடிந்த பிறகும் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் தன் பெயரோடு ஆர்யாவை பெயரையும் அப்படியே வைத்துள்ளார்.

இதனை பார்த்து ரசிகர்கள் அவருக்கு திருமணம் முடிந்துவிட்டது இன்னும் பெயரை அப்படியே வைப்பதா என கேள்வி எழுப்பி மோசமாக விமர்சித்து வருகின்றனர்.