Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வாலிபரை காரால் மோதி காயம் ஏற்படுத்திய ரஷ்மி கௌதம்! அவர் கூறும் விளக்கத்தை பாருங்க

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருபவர் ரஷ்மி கவுதம். அவர் கடந்த 17ம் தேதி இரவு படப்பிடிப்பில் இருந்து காரில் வீடு திரும்பியுள்ளார். அவரின் கார் விசாகப்பட்டினத்தில் உள்ள கஜுவாகா பகுதியில் சென்றபோது சாலையை கடக்க முயன்ற செய்யது அப்துல் என்பவர் மீது மோதியது.

இந்த விபத்தில் காயம் அடைந்த செய்யது அப்தலு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாலையை கடக்க முயன்றவர் மீது காரை ஏற்றியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஷ்மியின் கார் டிரைவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து ரஷ்மி விளக்கம் அளித்துள்ளார்.

நெடுஞ்சாலையில் விளக்கே இல்லை. அப்பொழுது அந்த நபர் சாலையை கடக்க முயன்றார். நான் காரை ஓட்டவில்லை. அங்கு சூழ்ந்த எவரும் உதவி செய்யாமல் செல்போனில் படம் பிடித்தனர். மேம்பாலத்தை பயன்படுத்த சோம்பேறித்தனம்பட்டு நெடுஞ்சாலையை கடக்க முயன்றவர் மீது குறை சொல்வதா இல்லை விளக்குகள் செயல்படாததை கண்டுகொள்ளாத அதிகாரிகளையா என்று கேள்வி எழுப்பியுள்ளார் ரஷ்மி கவுதம்.